புறப்பட்டது சுமா, சாணக்கியன் அணி!

நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சுவீகரிப்பின் போது அடக்கி வாசித்த சுமந்திரன் அன் கோ முழு வீச்சில் கோத்தாவின் காணிபிடியை

அம்பலப்படுத்த தொடங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவு புளுட்டுமானோடை பகுதியில் நில அபகரிப்பு தொடர்பாக தமிழ்தேசியகூட்டமைப்பு இன்று நேரில் சென்று பார்வையிட்டதாக அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம் புளுட்டுமானோடை பகுதியில் அடர்ந்த காட்டுக்குள்ளிருக்கும் பண்டைய தங்குமிடத்தை பண்டைக்காலத்தில் பிக்குகளின் தங்குமிடமான பௌத்த படுக்கையென தொல்லியல் திணைக்களம் உரிமை கோரியுள்ளது.அங்கு விரைவில் பௌத்த மத்திய நிலையம் கட்டுமான பணிகளை  ஆரம்பிக்கவுள்ளதான அறிவிப்பின் போதே கூட்டமைப்பினர் களவிஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினரர்களான சுமந்திரன்,சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன்,அரியநேத்திரன் என பலரும் அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.No comments