கோத்தா சிப்பாயாக வெறுங்கையுடன் திரும்புகிறார்?


இலங்கையில் நாள் தோறும் கொரோனா கட்டுங்கடங்காது சென்று கொண்டிருக்கின்ற நிலையில் தென்னிலங்கை ஊடகங்கள் கோத்தபாய அரசு மீது கடுமையான சீற்றத்தை கொண்டுள்ளன.

ஒருபுறம் தெற்கின் சீற்றத்தை தணிக்க மாஸ்க் போடாதவர்களை தரதரவென இழுத்து செல்வதனை காவல்துறை மூலம் காண்பிக்க இலங்கை அரசு முற்பட்டுள்ள போதும் அதனையே திருப்பி போட்டு தாக்கிவருகின்றன ஊடகங்கள்.

முன்னதாக பேரரசராக தன்னை காண்பித்து கதிரையேறிய கோத்தபாய தற்போது வெறும் சிப்பாயாக பதவியிலிருந்து போகப்போவதாக கடுமையாக விமர்சித்து வருகின்றன ஊடகங்கள்.



இலங்கை முழுவதுமுள்ள தனிமைப்படுத்தல் விடுதிகள் முழுமையாக நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

யாழ்.போதனாவைத்தியசாலை விடுதியில் 11 நோயாளர் படுக்கைகளும் , 4 அவசர சிகிச்சை பிரிவு கட்டில்களும் உள்ளன. அவை அனைத்தும் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவுடன் நிரம்பியுள்ளது. 

இதேவேளை குறித்த விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருவோர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையே தெற்கிலும் நீடிக்க தொடங்கியுள்ள நிலையில் மக்கள் சீற்றம் அரசு பக்கம் திரும்பியுள்ளது.




No comments