நாமல் வரவில்லை:ஆளுநர் கையளித்தார்!

 


கொரோனா ஊசி போடும் நிகழ்விற்கு வருகை தரவிருந்த நாமல் ராஜபக்ச பின்னடித்த நிலையில் இன்று யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா  தடுப்பூசி மருந்து வடக்கு மாகாண ஆளுநரால் , வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக  கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மற்றும் அரச பிரதிநிதிகளான டக்ளஸ் மற்றும் அங்கயனது பங்குபற்றுதலுடன் ஊசிகள் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பொது மக்களிற்கு தடுப்பூசி போடும் பணி யாழில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இரவிராக  முழித்திருந்து அதிகாலை சுகாதார பணிமனைக்கு கொண்டு சேர்த்து  காலை தடுப்பூசி  ஏற்றத் தொடங்கிய எம்மவர் அர்ப்பணிப்பு வார்த்தைக்கு அப்பாற்பட்டதென தீவக சுகாதார வைத்திய அதிகாரி தகவல் பகிர்ந்துள்ளார்.தடுப்பூசி போடும் அறிவிப்பு எமக்கு கிடைத்து இன்னும் 48 மணி நேரம் கடக்கவில்லை.அதற்குள் அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்வது எனும் கடின இலக்கை எம் சகபாடிகள் கடந்து இருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments