வவுனியாவில் சிறுவர்களிற்கும் கொரோனா!வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தோணிக்கல் பகுதியில் 2 வயது மற்றும் 9 வயது சிறுவர்கள் உட்பட 4 பேருக்கும், சிறிராமபுரம் பகுதியில் 3 வயது மற்றும் 8 வயது சிறுவர்கள் இருவருக்கும் ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள இஸ்லாமிய கலாசார மண்டபம் முன்பாகவுள்ள பிரபல பலசரக்கு வர்த்தக நிலையம் ஒன்றில் இருவருக்கும் தவசிகுளம் பகுதியில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது.

நவகமுக பகுதியில் ஒருவருக்கும் திருவேகம பகுதியில் ஒருவருக்கும் நெடுங்குளம் பகுதியில் ஒருவருக்கும் வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவருக்கும் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவருக்கும் தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும் ஆச்சிபுரம் பகுதியில் ஒருவருக்கும் பெரியகோமரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒருவருக்கும் என 18 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments