அரசியல் கைதிகள் விவகாரம்! வாயே திறக்காத கோத்தா அரசு!

அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் மௌனம் காத்தேவருகின்றது.

இந்நிலையில் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 260 சிறைக்கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் விசேட மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்கள் சிறிய தவறுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என,  சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடக பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.


No comments