மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கிய கிராமங்கள்!!


வடக்கில் வீசிவரும் பலத்த காற்றினால் புலோப்பாளை பிரதான வீதியில் இருந்த உயர் மின் அழுத்த மின்கம்பம் மீது தென்னைமரம் முறிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராமங்களுக்கான மின்சாரம் நேற்றிரவு துண்டிக்கப்பட்டு, குறித்த கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

இச்சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து அறத்திநகர், அல்லிப்பளை, புலோப்பளை கிழக்கு, மேற்கு, அரசன்குடியிருப்பு ஆகிய கிராமங்களுக்குரிய மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இன்று மீண்டும் சீர் செய்யப்பட்ட மின்சார விநியோகம், வழமைக்கு திரும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments