ஐரோப்பாவில் 2024 இல் பயன்பாட்டுக்கு வருகிறது பறக்கும் டாக்சிக்கள்


மின்கலம் மூலம் இயங்கும் பறக்கும் டாக்சிக்கள் 2024 அல்லது 2025 வாக்கில் ஐரோப்பாவில் பயன்பாட்டிற்கு வரும் என ஐரோப்பிய ஒன்றிய விமான ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இவற்றை முதற்கட்டமாக மருத்துவ பொருட்கள் விநியோகம்  உள்ளிட்ட வர்த்தக ரீதியிலான தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக இயக்குனர் பேட்ரிக் கி தெரிவித்தார்.

ஐரோப்பாவின் ஆறு நகரங்களில் வசிக்கும் 71 சதவீதம் பேர் விமான டாக்ஸிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 41 சதவீதம் பேர் அவசர மருத்துவ நடவடிக்கைகளுக்கு பறக்கும் டாக்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். 


No comments