வெசாக் அமைதியாகவாம்!தேசிய வெசாக் தினத்தை யாழ்ப்பாணத்தில் அமைதியாக நடத்தப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 23 தொடக்கம் 28 வரை யாழ்ப்பாணம் நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வுகள் இடம்பெற உள்ள நிலையில் இன்றைய தினம் தேசிய வெசாக் உற்சவ முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது.

இலங்கை புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்த்தனவின் தலைமையில் மாவட்ட செயலரின் பங்குபற்றுதலுடன் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

தற்போதுள்ள கொரோனா நிலைமைக்கு ஏற்றவாறு அனுசரித்து அதற்கு ஏற்றவாறு எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள தேசிய வெசாக் நிகழ்வினை நடத்துவது எனவும்,நிகழ்வில் பங்குபற்றுவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது அதிகரித்து வரும் தொற்று நிலைமையினை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மிக அமைதியான முறையில் தேசிய வெசாக் நிகழ்வினை கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டதாக ஊடகங்களிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments