வவுனியாவில் விபத்து! சிறுமி பலி!


வவுனியா அல்லுகல்லுப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர் கல்குண்ணாமடு பகுதியை சேர்ந்த 9 வயதுடைய ஆக்சரசினி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுமி சிறியதாயுடன் முக்சக்கர வண்டியுடன் பயணித்த போது எதிரே வந்த உந்துருளி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

உந்துருறுளி மோதியதில் முச்சக்கரவண்டியில் இருந்த சிறுமி தூக்கி வீசப்பட்டு வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.

சிறியதாய், முக்சக்கர வண்டி ஓட்டுநர், உந்துருறுளி ஓட்டுநர் ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


No comments