தாக்குதல் தொடங்கினால்! அது உக்ரேனின் முடிவின் தொடக்கத் கதையாக அமையும்! ரஷ்யா எச்சரிக்கை


உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள பிரிவினைவாதிகள் மீது உக்ரேன் படைகள்  முழுமையான தாக்குதல் மேற்கொண்டால், கிழக்கு உக்ரேனில் ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு உதவ மொஸ்கோ தலையிடக்கூடும் என்று ரஷ்ய உயர்மட்ட அதிகாரி டிமிட்ரி கோசக் எச்சரித்துள்ளார்.

ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களும் உக்ரேனிய துருப்புக்களும் நாட்டின் கிழக்கில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

கிழக்கு உக்ரேனின் எல்லையில் ரஷ்யா தனது படைகளைக் குவித்து வருகின்றது.

கிழக்கு உக்ரேனில் ரஷ்ய படைகள் தனது குடிமக்களை பாதுகாக்க தலையிடலாம். எல்லாம் உக்ரேனின் மோதலைப் பொறுத்தே தங்கியிருக்கிறது என டிமிட்ரி கோசக் கூறியுள்ளார்.

இது உக்ரேனின் முடிவின் தொடக்கக் கதையை குறிக்கக்கூடும். இது காலில் அடிப்பது அல்ல. இது முகத்தில் அடிப்பது என அவர் எச்சரித்துள்ளார்.

உக்ரேனின் எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்படுவதும். ரஷ்ய அதிகாரியின் இந்த எச்சரிக்கைகளை அடுத்து அமெரிக்காவும் ஜெர்மனியும் பதட்டங்கள் அதிகரிப்பதில் கவலை தெரிவித்துள்ளன.

No comments