கண்டறிப்பட்டது மூழ்கிப்போன இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல்


இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் காணாமல் போன நிலையில், 850 மீட்டர்கள் அடி ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இது சாதாரணமாக தப்புவதற்கான ஆழத்தை விட அதிகமான ஆழத்தில் மூழ்கி உள்ளதால் இதில் பயணமாக 53 மாலுமிகளும் தப்பிப்பிழைப்பதற்கான மிக மிகக் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் உயிரிழந்திருந்ததாகவே கருதப்படுகின்றது. 

“நீர்மூழ்கி கப்பலின் கடைசி இருப்பிடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ஒரு பெரிய அழுத்தமில்லாமல் சாதாரணமாக வெளிவரக்கூடிய பொருட்கள் அல்ல,” என இந்தோனேசிய ஏர் மார்ஷல் Hadi Tjahjanto தெரிவித்துள்ளார். 

தற்போதைய நிலையில், இந்நீர்மூழ்கி 850 மீட்டர்கள் அதாவது 2,788 அடி ஆழத்தில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது இந்த நீர்மூழ்கி கப்பலின் திறனைக் காட்டிலும் மிக அதிகமான ஆழமாகும். இந்நீர்மூழ்கி பொறுத்த வரையில், இது 500 மீட்டர்கள் அதாவது 1,640 அடிகள் வரை ஆழம் மட்டுமே செல்லும் திறனுடையது என இந்தோனேசிய கப்பல் படையின் தலைமை அதிகாரி Yudo Margono தெரிவித்திருக்கிறார். 

ஜெர்மனியில் உருவான இந்த நீர்மூழ்கி  KRI Nanggala-402

 டீசலில் இயங்கக்கூடியதாகும். இது இந்தோனேசியாவில் கடந்த 1981 முதல் பயன்பாட்டில் உள்ளது என இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல் குறிப்பிட்டுள்ளது. 

No comments