வடக்கில் சீனா:பின்னால் ஒடும் இந்தியா!வடக்கில் இந்திய துணைதூதர் பாடசாலை கட்டடத்திறப்பு,முதியோர் புனர்வாழ்வென அலைந்து திரிய சீனா தூதரகமோ சந்தமின்றி தனது கால்களை அகல பதிந்துவருகின்றது.

வடமராட்சி கிழக்கில் வத்திராயன், பகுதியில் சீனா நிதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவே இதுவாகும்.

ஏற்கனவே ஏ-9வீதியில் சாவகச்சேரியில் மூன்றடுக்கு கட்டடத்தில் செயற்படும் சீன அலுவலகம் பற்றி அரசு வாயே திறக்க மறுத்துவருகின்றது.

ஆனால் பளையில் ஆயிரம் ஏக்கர் காணியில் சீனா தனது புதிய வேலைத்திட்டத்தை சத்தமின்றி முன்னெடுத்துவருகின்றது.

ஏற்கனவே அரியாலை கிழக்கில் கடலட்டை குஞ்சு வளர்ப்பதாக செயற்படும் பண்ணை பக்கம் இந்திய தூதரகம் எட்டிக்கூட பார்க்கமுடியாதுள்ளது.

ஏற்கனவே கொழும்பு துறைமுக நகரம் சீன மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது வடக்கில் சாதாரண விளையாட்டுப்பூங்கா வரை சீனா வந்து நிற்கின்றமை இந்திய உளவுத்துறை மற்றும் வெளிவிவகார துறையின் தோல்வியேயென சொல்லப்படுகின்றது.


No comments