செல்வாவே ஈழ கனவை விதைத்தவர்!ஈழத்தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தின் தந்தையாக விளங்கும் எஸ்.ஜெ.வி செல்வநாயகம் அவர்களின் 44வது நினைவு தினம் நேற்றாகும் (26.04.2021). ஆரம்பத்தில் தமிழ் தேசிய இருப்பிற்காக சமஸ்டி தீர்வினை வலியுறுத்தி அதற்காக சாத்வீக முறையில் போராடி வந்த தந்தை செல்வா,  சிங்கள பேரினவாதத்தின் உண்மை முகத்தினை அறிந்த பின், வட்டுக்கோட்டையில் 1976 மே 14ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணி கட்சி மாநாட்டில்  என சுட்டிக்காட்டியுள்ளது பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரியக்கம்.இன்றிரவு அது விடுத்துள்ள ஊடக அறிக்கையில்தனது தலைமையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார் . 
இத்தீர்மானம் ஆனது தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியதோடு தமிழ் இனத்திக்கான நிரந்தர தீர்வினையும் முன்மொழிந்தது. வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு தமிழினம் வழங்கிய ஏகோபித்த ஆதரவானது ஒட்டுமொத்த இனத்தினதும் அரசியல் அபிலாசையினை முழு உலகிற்கும் வெளிப்படுத்தி நின்றது. இத்தீர்மானமே அதன் பின் நடைபெற்ற அனைத்து போராட்ட வடிவங்களுக்கும் அடிப்படையாக அமைந்தது. இன்று தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு தமிழ் மகனையும் மகளையும் பயங்கரவாதியாக சித்தரிக்க முயலும் சிங்கள பேரினவாத அரசானது தமிழினத்தின் அகிம்சை வழிப்போராட்ட வரலாற்றினை ஏனோ இலகுவாக மறப்பதுடன் மறைத்தும் வருகின்றது.
     
இன்று தமது நாட்டை இழந்து, இனஅழிப்பிற்கு உள்ளாகி, தமது பூர்வீக நிலங்களை சிங்கள பேரினவாதத்திடமிருந்து காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் தமிழ் இனத்திற்கு, தந்தை செல்வா காட்டிய அகிம்சை வழி போராட்டமானது ஒரு தமிழ் தேசிய பாதையினை காட்டி நிற்கின்றது. 2009ம் ஆண்டிற்குப் பின் அரசியலில் அனாதைகளாக, உரிமை போராட்டத்தின் வழித்தடத்தினை தேடி நிற்கும் தமிழினத்திற்கு, எம்மால் விட்டுக்கொடுப்புகளின்றி சலுகைகளை மறுத்து உரிமைக்காக மீண்டும் அகிம்சை வழியிலும் போராட முடியும் என்பதை தந்தை செல்வாவின் நினைவுகள் வலியுறுத்தி நிற்கின்றன. இன்று உரிமைக்காக மட்டுமன்றி நீதிக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் நாம், எமது வரலாற்று பாடங்களிலிருந்து, சிங்கள பேரினவாதத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை தெளிவாகவே அறிந்துள்ளோம். ஆயினும் சர்வதேசத்தில் எஞ்சியிருக்கும் மனிதவுரிமை மற்றும் நீதியின் மீதான பற்றுதியின் பால் நம்பிக்கை வைத்தே தொடர்ந்து போராடி வருகின்றோம்.

தமிழ் தேசியத்தின் மீதே தந்தை செல்வாவின் அரசியல் வாழ்வு கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆயின் இன்று சில தரப்புகள் தந்தை செல்வாவின் பெயரால் தமிழ் தேசிய நீக்க அரசியலை முன்னெடுக்க முயல்கின்றனர். இவர்கள் தமிழினத்தை தவறாக வழிநடத்த முயல்வதுடன் தந்தை செல்வாவின் தீர்க்கதர்சனமான அபிலாசையினை மறுதலிக்கவும் முற்படுகின்றனர். இவர்களை தமிழ் மக்கள் அடையாளம் காண்பதுடன் அவர்களை ஜனநாயக முறையில் தமிழ் தேசிய அரங்கிலிருந்து அகற்ற முன்வர வேண்டும்.

தந்தை செல்வாவின் நினைவுகளுடன் ஒன்றியிருக்கும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் ஆகிய நாம், அன்னார் காட்டிய வழியின் தமிழ் தேசிய வழியில் எவ்வித விட்டுக்கொடுப்புகளுமின்றி பயணிப்போம் என உறுதி எடுத்து கொள்கின்றோம். 

No comments