தமிழர்களை தண்ணி காட்டச் சொன்ன சீமான்!


”கோடைகாலம் தொடங்கிவிட்டதால் அனைவரும் தங்கள் வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க கேட்டுக்கொள்கிறேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிவிட்டதால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், ”வெப்பத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதுபோல பிற உயிரினங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும், ஆதலால் உறவுகள் அனைவரும் தங்கள் வீடுகளின் முகப்பில் அல்லது மாடியில் பறவைகளுக்கும், பிற சிற்றுயிர்களுக்கும் தண்ணீர்த்தொட்டி அமைத்து உயிர்நேயம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

தற்பொழுது கடும் வெயிற்காலமாக இருப்பதால் அனைவரும் மிகக் கவனமாகவும், வீட்டிலுள்ள முதியோர்களை அதீத கவனம் கொண்டு பார்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என்று அக்கறையுடன் கோரிக்கை வைத்துள்ளார். 

No comments