நவால்னி எந்த நேரத்திலும் இறக்கக்கூடும்!
ரஷ்ய சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நவால்னி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கடந்த 3 வாரங்களாக சிறையிலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.
இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அலெக்சி நவால்னி எந்த நேரத்திலும் உயிரிழக்ககூடும் என்று அவரது மருத்துவர் யர்சொல்ஸ்வா அஷீக்மின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்சி நவால்னியின் உடல்நிலை தொடர்பாக அவரது குடும்பத்தினர் கொடுத்த தரவுகளை பரிசோதனை செய்ததில் அவரின் உடலில் பொட்டாசியத்தின் அளவு தீவிரமாக உயர்த்தப்பட்டது. இது மாரடைப்பு மற்றும் சிறுநீரகத்தை பலவீனமடைய செய்யும். அலெக்சி நாவல்னி எந்த நேரத்திலும் உயிரிழக்கக்கூடும்’ என தெரிவித்துள்ளார்.
Post a Comment