கிளிநொச்சியில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் கோணாவில் மத்தியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
நேற்று (15.04.2021) இரவு இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டின் பின்பகுதியின் கூரையில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
கோணாவில் மத்தியை சேர்ந்த செல்வநாயகம் விதுசன் வயது 25 என்ற இளைஞனே தவறான முடிவெடுத்து இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
இதேவேளை கடந்த வாரம் இதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம் யுவதி ஒருவரும் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment