யாழ் உரும்பிராயில் விபத்து! 15 படையினர் காயம்!
மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் பலாலி வீதி வழியாக இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகனமும் உரும்பிராய் சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்தில் டிப்பர் வாகனம் குடை சாய்ந்தது, இராணுவத்தினரின் வாகனமும் கடும் சேதத்திற்குள்ளானது.
காயமடைந்த இராணுவத்தினர் 15 பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையின் 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சேதமடைந்த இராணுவ வாகனம் பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை இராணுவ அதிகாரிகளும் கோப்பாய் காவல்துறையினரும் மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment