மனிதகுல வரலாற்றில் 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்த ஆண் குழந்தை


மனித வரலாற்றில் முதன் முறையாக ஈராக்கில் 3 பிறப்புறுப்புகளுடன் ஆண் குழந்தை பிறந்து அதிசயத்தை ஏற்படுத்திய நிலையில், மருத்துவர்கள் அதில் இரண்டை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளனர்.

வடக்கு ஈராக்கின் மொசூலுக்கு அருகிலுள்ள டோஹுக் நகரிலே  குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அந்த  ஆண் குழந்தைக்கு 3 பிறப்புறுப்புகள் இருந்துள்ளன.

இதுகுறித்து டாக்டர் ஷாகிர் சலீம் ஜபாலி  கூறும் போது 

எங்களுக்கு தெரிந்த வரை உலகிலேயே டிரிபில்லா என்றும் அழைக்கப்படும் மூன்று பிறப்புறுப்புகளுடன் ஆண் குழந்தை பிறந்ததாக பதிவு செய்யப்பட்டது இதுதான் முதல் முறை.மனிதர்கள் வரலாற்றில் இதேபோன்ற 3 பிறப்புறுப்புகளுடன் குழந்தை பிறந்ததாக இதுவரை ஏதும் பதிவாகவில்லை.

பிறக்கும் 60 லட்சம்  குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டும் டிபல்லா எனப்படும் இரண்டு பிறப்புறுப்புகளுடன் பிறக்கும். ஆனால், முதன் முறையாக   3 பிறப்புறுப்புகளுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.குழந்தையின் 3 பிறப்புறுப்புகளில் ஒன்று மட்டுமே செயல்பட்டது. மற்ற இரண்டு உறுப்புகளால் குழ்ந்தைக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்றாலும் அதை அகற்றுவது நல்லது என மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.பின் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் இரண்டு செயல்படாத பிறப்புறுப்புகள் அகற்றபட்டன என டாக்டர் ஷாகிர் சலீம் ஜபாலி கூறினார்.

No comments