இராசப்பு யோசேப் ஆண்டகைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் அஞ்சலி


மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் இன மத பேதமின்றி ஆயருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் என அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் உட்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் எனப் பலரும்அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

No comments