கடல் வாடகைக்கு:ஓடி திரியும் டக்ளஸ்!இந்திய மீனவர்களிற்கு இலங்கை கடலை வாடகைக்கு விடும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை அரசிற்கு மிகவும் தர்ம சங்கடங்களை தோற்றுவித்துவருகின்றது.

இதன் தொடர்ச்சியாக பெரும்பாலான மீனவ அமைப்புக்கள் டக்ளஸிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் அதனை சமாளிக்க தனது ஆதரவு மீனவ அமைப்புக்கள் சகிதம் ஊடக சந்திப்புக்களை டக்ளஸ் தேவானந்தா நடத்த தொடங்கியுள்ளார்.

இதனிடையே கடற்றொழில் அமைச்சர் கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மிகவும் அக்கறையானவர். அதனால் இலங்கை மீனவர்கள் பாதிக்கும் விடயங்களை முன்னெடுக்க மாட்டார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

No comments