கோத்தா கூப்பிடமாட்டார்:அவருக்கு வக்கில்லை!



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்னை அழைக்கமாட்டார். அவ்வாறு அழைத்தால், சீனி, கலாசார நிலையம் உள்ளிட்டவற்றில் இடம்பெற்ற முறைக்கேடுகளையும் அதற்கான பொறுப்பாளர்களையும் நான் கூறுவேன். ஆனால், ஜனாதிபதி என்னை அழைக்கமாட்டார் என்று அனுரகுமார திஸாநாயக்க எம்.பி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, என்னை அழைத்து விசாரித்தார், அப்போது பல தகவல்களை வழங்கியுள்ளேன்.

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும், அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.

இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதற்காக, உண்டியல்களை உடைத்து பிள்ளைகளும் சில்லறை காசுகளை கொடுத்தனர். ஆனால், மிக் விமானத்தை கொள்வனவு செய்வதாக, உதயங்க வீரதுங்க பல மில்லியன் ரூபாயை கொள்ளையடித்து கொண்டார். அவர்களை​ எல்லாம் விடுதலைச் செய்யவேண்டுமா எனக் கேட்டார்.

“கள்வர்களை விடுதலைச் செய்வதற்கும், குற்றச்சாட்டுகளை முன்வைத்தோரை கைது செய்து சிறையிலடைக்கவும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.

No comments