யாழில் அரச வேலைக்கு பாலியல் லஞ்சம்?அங்கயன் இராமநாதன் மூலம் வேலை பெற்றுத்தர பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கின் அம்பன் பகுதியை சேர்ந்த கமநல சேவைகள் திணைக்கள பணியாளர் ஒருவரே முறைப்பாட்டின் அடிப்படையில் கைதாகியுள்ளார்.

தனக்கும் அங்கயன் இராமநாதனிற்குமிடையே தொடர்பு உள்ளதாக தெரிவித்து பாலியல் லஞ்சம் கோரப்பட்டுள்ளது.

பாலியல் லஞ்சம் கோரப்பட்டமை தொடர்பில் அங்கயனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமையினையடுத்து அவரது ஆலோசனையின் பேரில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே கைது நடந்துள்ளது.


No comments