கே.வி.ஆனந்த் மறைந்தார்!

 தமிழகத்தின் முன்னணி ஒளிப்பதிவாளர், இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைந்தார்.

தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமாகி உள்ளார்.

மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த்துக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவரது உடல் மியாட் மருத்துவமனையிலிருந்து  பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

கே.வி. ஆனந்த் கொரோனா  முதலாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் இரண்டாவது தடுப்பூசிக்காக காத்திருந்த நிலையில்தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

அயன்,கோ உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருந்தார்.

தமிழ் திரை உலகிற்கு மேலும் ஒரு இழப்பாக கருதப்படும் கே.வி.ஆனந்த் பத்திரிகை புகைப்படக்காரராக தனது கலை வாழ்க்கையைத் துவங்கினார். பிரபல ஒளிப்பதிவாளராக ஆன பிறகும், துவக்க காலத்தில் தனக்கு வாய்ப்பு அளித்த, 'சூப்பர் நாவல்' குழும இதழ்களுக்கு, அட்டைப்பட படங்களை அக்கறையுடன் எடுத்து வழங்கிவந்திருந்தார்.

புகைப்படக்காரர், ஒளிப்பதிவாளர், இயக்குனர், எல்லாவற்றுக்கும் மேலாக நன்றி மறவாதவர் என நினைவுகூரப்பட்டுள்ளார்.No comments