மிருசுவில் காணி சுவீகரிப்பு முயற்சி முறியடிப்பு

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இலங்கை இராணுவத்தின் 52வது படைப்பிரிவிற்கு காணி சுவீகரிக்கும்

முயற்சிக்கு எதிராக போராட்டத்தை மூதாட்டியொருவர் ஆரம்பித்துள்ளார்.மூதாட்டி பெண்ணெருவருக்குச் சொந்தமான 50 ஏக்கர் காணியை இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில்  நிலஅளவைத் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு இன்று திங்கட்கிழமை (05) சென்றிருந்தனர்.

நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் அங்கு சென்றிருந்த போது காணி உரிமையாளரான பெண்ணின் உறவினர்கள், தமிழ் கட்சிகளது உறுப்பினர்கள் வெளியிட்ட எதிர்ப்பினால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

இந்தக் காணியில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளதோடு ஏணைய 10 ஏக்கர் காணிகளையும் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளதாக காணி உரிமையாளர் குறப்பிட்டுள்ளார்.

2009 இன் பின்னராக பாரிய படைமுகாமாக இது அமைந்துள்ளதுடன் கோத்தபாய நேரில் விஜயம் செய்த முகாமாக பிரபல்யமடைந்துள்ளது.
No comments