வவுனியாவிலும் நினைவேந்தப்பட்டது நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்

உறவுகளால் நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி நினைவேந்தப்பட்டார்.

குறித்த அஞ்சலி நிகழ்வுகள் அவர்களது போராட்ட கொட்டகையினுள் இன்று (19.04.2021) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது. இதன் போது அன்னை பூபதியின் உருவம் பொறிக்கப்பட்ட பதாதைக்கு மலர் அஞ்சலி செலுத்தியுடன் சுடரேற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments