கரவெட்டியிலும் தமிழை காணோம்?தனியார் லீசிங் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகையில் தமிழ் மொழியினை காணவில்லையென தேடிவருகின்றனர்.

அவ்வாறு தமிழ் மொழியை காணாமைக்கு கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளராம்.

நெல்லியடிப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இந்த பெயர்ப் பலகை நாட்டப்பட்டுள்ளது. 

இதில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் பெயர்ப் பலகை பொருத்தப்பட்டதுடன் தமிழ் மொழி மூலமான பெயர்ப் பலகை பொருத்தப்படவில்லை. 

கொமேர்சல் லீசிங் கம்பனி தமிழ் மொழி குறிப்பிடப்படாத பெயர்ப்பலகை நாட்டப்பட்டது கண்டனத்திற்குரிய விடயமாகும். அத்துடன் கரவெட்டி பிரதேச சபை யாப்பை மீறும் செயற்பாடாகவும் உள்ளது. இது தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தவிசாளர் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.


No comments