முள்ளிவாய்க்காலில் கடற்றொழில் வளாகம்?கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார் கற்கைநெறிகளைக் கொண்ட வளாகம்  ஒன்றை முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பிரதேசத்தில் அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றது.

இனஅழிப்பு யுத்தத்தின் எச்சமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள முள்ளிவாய்க்காலில் இத்தகைய பல்கலைக்கழகத்தை நிறுவுவதன் மூலம் தனக்கு வெள்ளையடிக்க இலங்கை அரசு முற்படுகின்றதாவென்ற சந்தேகம் இன்னொருபுறம் வலுத்துள்ளது.

சுமார் 3400 மில்லியன் முதலீடடில்  100 ஏக்கர் விஸ்தீரனமுள்ள யாழ். பல்கலைக் கழகத்தின் வளாகம் ஒன்றினை முல்லைத்தீவில் அமைக்கும் திடடம் இலங்கை அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 


No comments