நீரில் மூழ்கி காணாமல் போன கப்பலில் இருந்த 53 கடற்படையினரும் உயிரிழப்பு!


இந்தோனேசியாவில் காணாமல் போன நீர் மூழ்கிக் கப்பலில் இருந்த 53 பேரும் இறந்துவிட்ட்தாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் 800 மீட்டருக்கும் அதிக ஆழத்தில் சமிக்ஞை கிடைத்ததைத் தொடர்ந்து  கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மூன்றாகச் சிதறிய கப்பலின் பாகங்கள் கடலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இறந்த இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

1981இலிருந்து அந்தக் கப்பலை இந்தோனேசிய கடற்படை பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments