ஈஸ்ரர் வெடிப்பு:கோத்தாவை இரகசியமாக சந்தித்த மல்கம்!

 


ஈஸ்ரர் குண்டுவெடிப்பின் பின்னர் கோத்தபாயவை அழைத்து தனித்து மல்கம் ரஞ்சித் ஆண்டகை பேசியமை அம்பலமாகியுள்ளது.

2019ம் ஆண்டு ஜனாதிபதியாவதற்கு முன்னதாக நடந்த சந்திப்பின் தொடர்பில் கோத்தாவை ஜனாதிபதியாக்கவும் ஆதரவளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈஸ்ரர் தாக்குதலின் பின்னராக ஜனாதிபதி தேர்தலில் கத்தோலிக்க மக்களது வாக்கு சஜித்திற்கு எதிராக திரும்பிய நிலையில் கோத்தா வெற்றி பெற்றிருந்தார்.

எனினும் வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றாத கோத்தா தொடர்பில் கடும் சீற்றமடைந்து கர்தினல் சிக்கலாக கருத்துக்களை வெளியிட அதற்கு தொலைபேசி மிரட்டல் வர அவ்வாறு சொல்லவில்லையென பல்டியடித்த கதை பிரபலமானது.
No comments