உயிர்த்த ஞாயிறு நினைவேந்தல்! வடகிழக்கு அலட்டிக்கொள்ளவில்லை!

ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் தமிழர் தாயகத்தில் பெரிதும் அலட்டிக்கொள்ளா மனோநிலையே

காணப்பட்டது.

கடந்த 30வருடங்களாக தமிழர் தேசத்தில் நடந்த படுகொலைகள் பற்றி கண்டுகொள்ளாத தெற்கு தற்போது தமக்காக குரல் எழுப்ப தமிழ் தேசத்தை கோரிவருகின்றது.

எனினும் தமிழ் மக்கள் மனங்களில் இதனை பற்றி அலட்டிக்கொள்ளாத மனோநிலையே காணப்படுகின்றது.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் ஈஸ்டர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர விடுக்கப்பட்ட அழைப்பிற்கு எவரும் வருகை தரவில்லை.

முhநகர முதல்வர் மற்றும் அருகாகவிருந்த ஆயர் இல்லத்தை சேர்ந்த ஒரு சில கன்னியாஸ்திரிகள் பங்கெடுத்த நிலையில் அருகாகவுள்ள பாடசாலையிலிருந்து மாணவர்கள் தருவிக்கப்பட்டு கணக்கு காட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் , நட்சத்திர விடுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 39 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 250இற்கும் மேற்பட்டோரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. 500இற்கும் மேற்பட்டவர்கள் அவயவங்களை இழந்து குடும்பத்தை இழந்தனர். 

 அன்றைய தினம் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக நாட்டின் பல பாகங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.

யாழ். மரியன்னை தேவாலயத்தில் காலை 8.45 மணி அளவில் தேவாலய மணி ஒலிக்கப்பட்டு , மௌன அஞ்சலிகள் செலுத்தப்பட்டு மெழுகுதிரி ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகளும்  இடம்பெற்றன.

No comments