இலங்கை :இறந்தவர் திரும்பிய கதை!நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்ட பின்னர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டு்ள்ளது. 

மயக்கமடைந்த நபர் மருத்துவமனையின் வெளி நோயாளி பிரிவில் (OPD) மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது உடல் மருத்துவமனை சவக்கிடங்கிற்கு மாற்றப்பட்டது.

இருப்பினும், அவரது உறவினர்கள் சவக்கிடங்கிற்கு வந்தபோது அவர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனை வோர்டுக்கு மாற்றப்பட்டார்.

உடலில் சர்க்கரை குறைவாக இருப்பதால் அவர் கோமாவில் விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர் மீது ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments