திங்கள்: தமிழ் தேசிய துக்கதினம்!



மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் மறைவையொட்டி அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசம் எங்கும் துக்க தினங்களாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாகவும் பிரகடனபடுத்தப்படுத்துவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்களது கூட்டு அறிவித்துள்ளது.

தமிழ் தேசிய கட்சிகள், பொது மக்கள் அனைவரும் ஆதரவு வழங்குவதுடன், திங்கட்கிழமை அனைவரும் தங்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும், வணிகநிலையங்களிலும் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டும், உடைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்தும் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாக இன்றிரவு விடுக்கப்பட்டுள்ள ஊடக றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தமிழகம் மற்றும் புலம்பெயர்தேசம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆயர் அவர்களின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிடமுடியாத ஒரு பேரிழப்பாகும். அவரின் இழப்பால் தமிழ் தேசியம் ஒரு சிறந்த தலைவனை 

இழந்து நிற்கின்றது. தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்து தேசியத்தின் பால் ஓங்கி ஒலித்த குரலை தமிழர் தேசம் இன்று இழந்து நிற்கின்றது . 2009 ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கபட்ட பின் தமிழர் தேசம் திக்கற்றவர்களாக நின்ற நேரம் அவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்கியவர். தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கையை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் பொது வெளியிலும் சர்வதேசத்திலும் அறுதியிட்டு தெரிவித்தவர். பாதிக்கப்பட்ட தமிழினத்தின் நீதி குரலாக,சாட்சியாக இருந்த மிகப்பெரும் ஆளுமையை நாம் இன்று இழந்து நிற்கின்றோமெனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது. 

 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்

வட-கிழக்கு சிவில் சமூக சம்மேளனம்

வடக்கு கிழக்கு வலிந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு 

பல்சமயங்களின் ஒன்றியம் மட்டக்களப்பு

முதியோர் சம்மேளனம் மட்டக்களப்பு

வெண்மயில் அமைப்பு மட்டக்களப்பு

அமெரிக்கன் மிசன் மட்டக்களப்பு

சடோ லங்கா நிறுவனம் மட்டக்களப்பு

அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையம்

தமிழர் நலன் காப்பகம் மட்டக்களப்பு

சிவகுரு ஆதீனம் யாழ்ப்பாணம்

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு மட்டக்களப்பு

புழுதி சமூக உரிமைக்கான அமைப்பு திருகோணமலை

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு

உலக தமிழர் மாணவர் ஒன்றியம்

இராவண சேனை திருகோணமலை

வடக்கு கிழக்கு பொது அமைப்புகள் மற்றும் சம்மேளனங்கள்


No comments