இலங்கைக்கு எதிரான தீர்மானம்! ஜெனீவாவில் வாக்கெடுப்பு ஒத்திவைப்பு!!


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீரமானம் மீதான வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெறவிருந்த நிலையில் , சில ஆவணங்களில் காணப்பட்ட சிக்கல்களின் காரணமாக நாளை செவ்வாய்கிழமை வரை வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் கனடா, ஜேர்மன், வட மசிடோனியா, மொன்டனீக்ரோ, மலாவி மற்றும் ஐக்கிய இராயச்சியம் ஆகிய  நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை முன்வைத்துள்ளது. அந்த தீர்மானத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் உள்ளிட்ட பல காரணிகள் குறித்து வலியுறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை இலங்கை தொடர்பில் விவாதத்தோடு முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

வாக்கெடுப்பின் பின்னர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கையின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் குறித்த தீர்மானத்தில் பல விடயங்கள் அரசியல் தேவைக்காக உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. 

இலங்கையின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் குற்றஞ்சுமத்துதல்,  அவை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துதல் என்பன சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றும் இலங்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments