விக்கியின் கட்சியை ஏற்றுக்கொண்டது தேர்தல் ஆணைக்குழு


சி.வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியை கட்சியாகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுள்ளது என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அரசியலுக்கு பிரவேசித்த நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்தார். உட்கட்சி முரண்பாடுகளால் 2019ஆம் ஆண்டு அவர் தமிழ் மக்கள் கூட்டணி கட்சியை உருவாக்கினார்.

இந்தக் கட்சியைப் பதிவு செய்ய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால், கட்சி ஆரம்பிக்கப்ட்டு நான்கு ஆண்டுகள் ஆகவில்லை என்று காரணத்தால் அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை

இந்நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் பெயரை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற பெயரில் மாற்றி கூட்டணி அமைத்து 2020 தேர்தலில் விக்னேஸ்வரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், புதிய கட்சிகளைப் பதிவு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில் இந்த வாரத்தின் முற்பகுதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்தித்த விக்னேஸ்வரன் கட்சி தொடர்பான ஆவணங்களையும் வழங்கினார்.

அவரது கட்சி ஆரம்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டதாலும் பாராளுமன்றத்திலும் அங்கம் வகிப்பதால் இந்த தடவை அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படாது என்றும் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்றே தெரியவருகின்றது.

No comments