சுவீடனில் கத்திக்குத்து! 8 பேர் படுகாயம்!


சுவீடன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஜான்கோபிங் நகரத்தில், பொதுமக்கள் மீது திடீரென ஒரு நபர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு பொதுமக்கள் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் நேற்றுப் புதன்கிழமை 15.00 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜான்கோபிங் நகர காவல்துறையினர், தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த நபர், திடீரென பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த நபர் பயங்கரவாத இயக்கத்தோடு தொடர்புடையவரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு சுவீடன் நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லோப்வன் கண்டனம் தெரிவித்துள்ளார் .

No comments