அம்பிகைக்கு ஆதரவாக நோர்வேயில் போராட்டம்

ஈழத் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகட்கு நீதிவேண்டியும், இனவழிப்புச் செய்த சிங்களப் பேரினவாத அரசினைத் தண்டிக்கவும் பிரித்தானிய அரசைக்கோரும் திருமதி. அம்பிகை செல்வக்குமாரன் அவர்களின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை பிரித்தானிய அரசு அதிகவனம் செலுத்தவேண்டும் என்பதை முன்னிறுத்தி நோர்வேத் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒஸ்லோவில் முன்னெடுக்கப்பட்டிருந்து.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நோர்வே பாராளுமன்றத்தின் முன்னால் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகிய கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி அம்பிகையின் போராட்டத்திற்கு வலுச்சேர்த்தார்கள். 

No comments