கிளிநொச்சி இத்தாவிலில் விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் நேற்று (26.03.2021) இரவு  இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் அவரது இரு மகன்கள் 

உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிய திசையில் கார் காணப்படுவதாவும் அதற்கு நேரெதிரே டிப்பர் காணப்படுகிறது.

வீதியை விட்டு விலகிய ரிப்பர் காருடன்  மோதி விபத்து இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்திருக்கின்றனர்.

விபத்தில் பளை தர்மங்கேணி பகுதியை சேர்ந்த சற்குணம் சாருஜன், சற்குணம் சாரங்கன் என்ற சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு. அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த சிறுவர்களின் சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments