ஆண்டான்குளத்தில் கைது:தமிழர் தொல்லியல் மாட்டு தொழுவத்தில!
முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராம மக்களின் காணிகளுக்கு செல்ல வன ஜீவராசிகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.
இதனிடையே கிராமத்தில் குடியேறி வாழ்ந்த தமிழ் பொதுமகன் ஒருவரை அத்துமீறி அரச காணியினுள் புகுந்ததாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.அத்தோடு குடும்ப பெண்ணொருவரையும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தாக்க முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன
1984 வரை பல தமிழ் குடும்பங்கள் வாழ்த்த குமுளமுனை ஆண்டான்குளம் யுத்த இடப்பெயர்வின் பின்னராக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நெடுங்கேணி பகுதியில் புராதன சிவாலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் காணப்படுகின்ற ஆவுடையார் பாண்டியர் காலத்துக்குரியதாகுமெனவும் தற்போது கவனிப்பாரற்று ஒரு தனிநபரின் காணியில் உள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
சிவாலயம் இருந்த இடத்தில் பல கருங்கற் சிதைவுகள் காணப்படுகின்றதுடன் சிவலிங்கத்தின் சிதைவுகளும் உள்ளது. அவற்றின் நடுவே சில தூண்கள் நிமிர்ந்த நிலையிலும், சாய்ந்த நிலையிலும் உள்ளது. அவ்விடம் காணி உரிமையாளரால் மாட்டுத்தொழுவமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment