அரசியல் பழிவாங்கல் குழு அறிக்கை கிடப்பில்!



தனது ஆதரவாளர்களை பாதுகாக்க கோத்தபாய உருவாக்கிய ஆணைக்குழு முடக்க நிலையை சந்தித்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வரும்வரை அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டாம் என அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுக்கள் செவ்வாய்க்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர உள்ளடங்கலான மூவர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அந்தவகையில் அமைச்சரவை செயலாளர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டாம் என குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதனை அடுத்து குறித்த மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் மே 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.

No comments