தொடங்கியது யாழில் புதிய பேருந்து நிலைய சேவைகள்!யாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தினை பயன்படுத்த இலங்கை அரச ஆதரவு போக்குவரத்து சபை பேருந்துகள் தொடர்ந்தும் மறுத்தேவருகின்றன.   இன்றைய தினத்திலிருந்து வட மாகாண தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் குறித்த பஸ் நிலையத்தில் இருந்து சேவையினை ஆரம்பிக்கவில்லை

இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் குறித்த சேவையினை நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து செயற்படுவதற்கு பின்னடித்து வரும் நிலையில் இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர்,யாழ் மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க தனியார் துறையினர் தமது சேவையினை இன்றைய தினம் ஆரம்பித்து நிலையிலும் இபோ ச அரச பேருந்துகள் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுபதை புறக்கணித்துள்ளனர்.

அரச ஆதரவு தொழிற்சங்கங்களே இதனை தடுத்து வருவதாக சொல்லப்படுகின்றது.


No comments