நல்லூர் போராட்டம் உக்கிரமடைகின்றது!

 


வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டமானது நேற்று நள்ளிரவு தாண்டியும் சுழற்சி முறையில் தொடர்ந்த வண்ணம் உள்ளது. பல அரசியல் பிரமுகர்கள் ,சிவில் சமூக அமைப்புக்கள் தமிழ் இளையோர் அமைப்புகள் ,தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பலரும் வந்து மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தொடர்ச்சியாக மக்கள் ஆதரவோடு போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.


தமிழ் உணர்வாளர்களை உரிமைப் போராட்டத்திற்கு வலு சேர்க்க இணைந்து  கொள்ளுமாறு மாணவ தலைமைகள் அழைப்புவிடுத்துள்ளன.இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தி போராட்டத்தை தொடர்வோம் என மாணவ தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


No comments