கென்டனில் வீதியை மறித்தனர் தமிழர்கள்! காவல்துறையுடன் முட்டிமோதல்!


பிரித்தானியா கென்டனில்  சிறீலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரி அம்பிகா செல்வக்குமார் சாகும் வரையான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தை நடத்திவருகிறார்.



ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வில் பிரித்தானிய சமர்பித்துள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைத்தல், சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை உருவாக்குதல், மற்றும் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தர சிறப்புப் பிரதிநிதியை நியமித்தல் போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் என பிரித்தானிய அரசிடம் வேண்டுகோள் விடுத்து சாகும் வரையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை அம்பிகா செல்வக்குமார் ஆரம்பித்திருந்தார்.

இன்று 16 நாளில் அவருக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில்  நூற்றுகணக்கான தமிழ் மக்கள் அவரது வீட்டுக்கு முன்னர் அணிதிரண்டு ஆதரவு தெரிவித்தனர். போராட்த்தில் கலந்துகொண்டவர்கள் எங்களுக்கு நீதி வேண்டும் எனக் கோசங்களை எழுப்பினர்.

போராட்ட காரர் ஒருவருடன் காவல்துறையினர் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து  காவல்துறையினர் ஒருவர் குறித்த நபரைத் தள்ளியதை அடுத்து அங்கு இயல்புநிலை மாறியது. அதனைத்தொடர்ந்து அவரை மடக்கி நிலத்தில் வீழ்த்தி கைது செய்தனர் காவல்துறையினர்.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள்  அம்பிகாவின் வீட்டுக்கு முன்னே அமைந்த கிங்ஸ்பெரி வீதியை மறித்ததால் காவல்துறையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே வாக்குவாதங்களும் இழுபறி நிலையும் இடம்பெற்றிருந்தது.

போராட்டக்காரர்கள் கைது செய்ய நபர் அடைக்கப்பட்ட காவல்துறை வாகனத்தை நகரவிடாது நிலத்தில் வீழ்ந்து படுத்துள்ளனர்.

இறுதியாக பதிவு இணையத்திற்கு கிடைத்த தகவலின்படி கைது செய்யப்பட்ட நபர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனத் தெரியவந்துள்ளது.

No comments