கட்டைப்பஞ்சாயத்து தாக்குதலா?

 


தனது தம்பியின் நண்பர்களை காப்பாற்ற முற்பட்டதாலேயே தாக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார் சிறீதரனின் மகன் சாரங்கன். சம்பவம பற்றி கருத்து வெளியிடுகையில் தம்பி தொலைபேசியில் அழைத்து நீலாம்பரி உணவகத்தடியில் நிற்பதாகவும், தன்னோடு வந்த நண்பர் ஒருவரை தாக்க சிலர் வந்து நிற்பதாகவும் சொல்லி என்னை அங்கு வர சொன்னான். நான் உடனே அங்கு சென்று தம்பியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். 

பின் நீலாம்பரியில் நின்ற தம்பியின் நண்பர்கள் இருவர் தம்மை தாக்க ஒரு குழு வந்திருப்பதாகவும் தம்மையும் பாதுகாப்பாக அழைத்து செல்லுமாறு அழைப்பெடுத்தனர். குறித்த இரு தம்பியவையும் எமது வீட்டிற்கு வருகை தருபவர்கள் மற்றும் எமது கல்லூரின் மாணவர்கள் என்ற ஒரு நெருக்கத்தில் அவர்களையும் பாதுகாப்பாக அழைத்து வர நீலாம்பரி உணவகத்தடிக்கு மீண்டும்1.38 மணியளவில் சென்றேன். அவர்கள் இருவரையும் ஏற்றி பாதுகாப்பான இடத்த நோக்கி செல்ல ஆரம்பித்த போது நான் ஏற்றிய ஒருவரை தாக்க வந்த குழு அவர் எனது மோட்டார் சைக்கிளில் ஏறியதை கண்டு எமது மோட்டார் சைக்கிளை பின்தொடர்கிறார்கள் என்று பின்னால் இருந்த தம்பியவை சொன்னார்கள். நான் சற்று வேகமெடுத்து எமது வீட்டு கேற்றை 1.43 மணியளவில் அடைந்து விட்டோம். 

அப்போது 5 மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் கொண்ட குறித்த குழு எம்மை தாக்க வந்தனர். உடனே நாம் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு எமது வளவுக்கு சென்றோம். அப்போது எனது முதுகில் ஒருவர் கட்டையால் தாக்கினார். பின் வந்த குழுவில் ஒருவர் "ஊஊவுஏ இருக்குதுடா" என்று கத்தினார். உடனே எம்மை துரத்திய குழு வெளியே சென்று எனது மோட்டார் சைக்கிளை பலமாக தாக்கி உடைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். 

சம்பவத்தின் ஆரம்பம் :- இந்த சம்பவத்தில் வந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும் எனக்கும் எமது குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த தொடர்பும் இல்லை. அவர்களை எமக்கு யார் என்றும் தெரியாது. 

தாக்குதல் மேற்கொள்ள வந்த குழுவினர் என்ன நோக்கத்திற்காக தாக்க வந்தார்கள்? எனது தம்பியின் நண்பர்களை தாக்க வந்தார்களா இல்லை என்னை தாக்க வந்தார்களா அல்லது வேறு ஏதும் நோக்கத்திற்காக வந்தார்களா என்று தெரியாது. 

பொலீஸ் விசாரனை நடைபெற்று வருகின்றது. ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று பொலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். விசாரனை முடிந்தால் தான் என்ன காரணத்திற்காக தாக்குதல் இடம்பெற்றது என்று உறுதியாக தெரியவரும். 

அரசியல் சம்பந்தப்பட்ட குடும்பம் என்பதால் நடைபெற்ற சம்பவத்தை வைத்து சில போலி புரளி கதைகளும் சில அறிவுஜீவிகளால் அவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் சிலவற்றை நானும் அவதானித்தேன். அதனால் தான் விடயத்த்தின் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்த இப் பத்தி முலமாக வெளிப்படுத்தியிருக்கிறேன். நடந்த விடயத்தை சம்பந்தப்பட்ட தரப்பு நாம் சரியாக தெளிவுபடுத்தாமல் விடும்  பட்சத்தில் எம் மீது அதிகூடிய அன்பும், விருப்பமும் உள்ள சிலர் இந்த விடயத்தை வேறுவிதமாக புதிய சிறந்த கதைகளை உருவைக்கி செய்தியாக்கவும் சந்தர்ப்பங்கள் இருக்கு என பலர் அறிவுறுத்திய பின்னே இப் பத்தியை எழுதியிருக்கிறேன் என சிறீதரன் சாரங்கன் தெரிவித்துள்ளார்.


No comments