பாக்குநீரிணையை கடக்கும் சியாமளா!இந்திய நீச்சல் வீராங்கனையான சியாமளா கோலி 30 கிலோமீற்றர் அகலமுடைய பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியை இன்று ஆரம்பித்துள்ளார். 

மன்னாரிலிருந்து பாக்கு நீரிணையை நீந்தி கடந்து இந்தியாவின் தனுஸ்கோடியை, 47 வயதுடைய நீச்சல் வீராங்கனை சியாமளா கோலி சென்றடையவுள்ளார்.இச்சவால்மிக்க பயணத்தை உலகளவில் வெற்றிகரமாக மேற் கொண்டிருக்கும் இரண்டாவது பெண்மணியாகவும், 13 வது நீச்சல் வீரராகவும் அவர் திகழ்கிறார்.

பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனையானது சகல பெண்களுக்குமான ஒரு பாரிய சாதனையாக பதியப்படும் என நம்பும் சியாமளா கோலி; முடியாதது எதுவும் இல்லை என்பதனையும் பெண்கள் உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிப்பதற்கும் இவ்வாறான விடயங்கள் விடயங்கள் ஆதரவாக அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


No comments