மின்சாரம் தடை!
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு 7 மணியிலிருந்து சுமார் இரு மணித்தியாலங்களிற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டிருந்தது.முன்னறிவிப்பின்றிய திடீர் தடையினால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர் கொண்டிருந்தர.
மின்சாரம் தடைப்பட்டமையால் சாதாரண தர பரீட்சை எழுதுவோர் உட்பட மாணவர்கள்; என அனைவரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
வீதி போக்குவரத்து மார்க்கங்கள் முற்றாக செயலிழந்திருந்தன.வர்த்தக நிலையங்கள் மின்துண்டிப்பால் நேர காலத்துடன் இழுத்து மூடப்பட்டிருந்தது.
அநுராதபுரம் புதிய நகரில் உள்ள மின் உபநிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக வட மாகாணத்திற்குட்பட்ட ஜந்து மாவட்டங்களும் கிழக்கு மாகாணத்தின் வாழைச்சேனை, ஹபரனை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் இலங்கை மின்சாரசபை ஈடுபட்டிருந்த நிலையில் இரண்டு மணித்தியாலங்களிற்கு பின்னர் மின்சாரம் இயல்பு நிலைக்கு திரும்பியது.
Post a Comment