பி.சி.ஆர் பரிசோதனைக்கு சென்று கொரோனா வாங்கிய கதை!

 


படத்தை பார்த்து நிவாரணம் பெற காத்திருப்போர் என கருத வேண்டாம்.அனைவரும் கொரோனா தொற்று பரிசோதனைக்காக காத்திருக்கும் யாழ்.நகரின் நவீன சந்தை வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள்.

நேற்று 143 பேருக்கு தொற்றையடுத்து திருநெல்வேலி, பாற்பண்ணைப் பகுதி பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இராணுவக் காவலில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்.நகரில் அமைந்துள்ள நவீன சந்தை கட்டட தொகுதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , பணியாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் இன்றைய தினம் காலை முதல் பெறப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைக்காக வருகை தந்தவர்கள் சமூக இடைவெளியை பேணாது கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு தமது மாதிரிகளை வழங்க நிற்கும் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு கடும் விசனத்தை பலரும் தெரிவித்து வருகின்றனர். 

"பி.சி.ஆர் பரிசோதனைக்கு சென்று கொரோனா வாங்கி வர காத்திருப்போர் " என பலரும் படங்களை பகிர்ந்து தமது விசனத்தை தெரிவித்து வருகின்றனர். இதேவேளை பரிசோதனைக்காக வந்திருப்பார் சமூக இடைவெளி பேணாது கூட்டமாக குழுமி இருப்பது தொடர்பில் சுகாதார பிரிவினர் பாராமுகமாக இருப்பது தொடர்பிலும் பலர் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.


No comments