மறைத்து வைக்கப்பட்டுள்ளனரா முன்னாள் போராளிகள்?இறுதி யுத்தத்தில் சரணடைந்த மற்றும் கைதான விடுதலைப்புலிகள் போராளிகள் தொடர்ந்தும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனராவென்ற சந்தேகம் வலுத்தே வருகின்றது.

2009ம் ஆண்டிற்கு முன்னதாக விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தொடர்ச்சியாக தற்போது முன்னெடுக்கப்படும் அகழ்வுகள் இதனை ஊர்ஜிதப்படுத்திவருகின்றது.

இன்று செவ்வாய்கிழமை கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் என்றழைக்கப்பட்ட பகுதியிலே புதையல் தோண்டும் பணி இடம்பெற்றுள்ளது.


நேற்று நள்ளிரவு மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட போதே இலங்கை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கைதுகள் அரங்கேறியுள்ளது.

மாத்தளை, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐவரே கைது செய்யப்பட்டுள்ளனர்

கைதாவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் கருவி மற்றும் பயணித்த மோட்டார் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.


No comments