மன்னாரில் மாணவன் பலி:வடமராட்சியில் மாணவிக்கு கொரொனா

 


இன்று செவ்வாய்கிழமை மன்னாரில் இடம்பெற்ற புகையிரதம் மற்றும் பேரூந்து விபத்தில் படுகாயமடைந்த ஒன்பது வயதுடைய பாடசாலை மாணவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளான்.

தலைமன்னார் விபத்தை அடுத்து மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு நிலவுகிறது. குருதி கொடையாளிகள் குருதி வழங்கி உதவுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்டேன்லி டி மெல் அவசர கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆயினும் பெருமளவு இளைஞர்கள் திரண்டு குருதி கொடையளித்ததையடுத்து குருதி சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வடமாகாணத்தில் இன்றைய தினம் பாடசாலை மாணவி உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தொண்டமனாறு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி மற்றும் ,யாழ் சிறையில் இருந்து விடுதலையான ஒருவர், யாழ் போதானவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள, மன்னாரைச் சேர்ந்த கர்ப்பவதி என மூவருக்கு கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது.

மாணவி கல்வி கற்கும் பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையத்தை சேர்ந்த சக மாணவர்களை  சுயதனிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இன்றிரவு வரை சுகாதாரப்பிரிவினால் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் ஏதும் வெளியாகவில்லை. 


No comments