கொரோனா-சீன தடுப்பூசி:விழிப்புடனிருக்க அழைப்பு!கொரோனா கிருமிக்கு எதிரான சீனத்  தடுப்பூசி இதன் பாதுகாப்புத் தன்மை மற்றும் செயல்திறன் தொடர்பான துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகளையும் மீறி உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியும் இன்றி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை மருத்துவ நிபுணர்களின் சங்கமும் தனது கவலைகளை வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் கோரிக்கையின் பேரில் தருவிக்கப்பட்டுள்ள சீன தடுப்பூசி தொடர்பில் பொதுமக்கள் அனைவரையும் அரசியல் நோக்கங்களுக்கு விழிப்புணர்வுடன் இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏற்கனவே இந்தியா தானாக முன்வந்து கொரோனா தடுப்பூசிகளை வழங்கியிருந்த நிலையில் தற்போது இலங்கை சீனாவிடம் ஓடிச்சென்று தடுப்பூசியை பெற்றுள்ளது.


No comments