சிறிதரனை தேடி வந்த காவல்துறை!கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களிடம் இன்று (18)ம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் மன்னார் போலிசாரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும்  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் நில ஆக்கிரமிப்பு தமிழர் மீது தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்படுகின்ற  அடக்குமுறை நில ஆக்கிரமிப்பு   முஸ்லீம் களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பேரணி ஒன்று சிவில் சமூக அமைப்புகள்  மூத்த தலைவர்கள் அரசியல் பிரதிநிதிகள் கட்சித் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டு முன்னெடுக்கப்பட்டது.

கடந்த கடந்த மாதம் 3 ஆம் தேதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பேரணி பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பொலிகண்டியில் நிறைவு பெற்றுள்ளது. மன்னார் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட  பிரதேசத்தில் இடம் பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரிடம்  மன்னர் போலீசாரால்  வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது இன்று (180 பகல் 12.30 மணிக்கு அவரது அலுவலகத்துக்கு சென்ற மன்னார் பொலிசார்   வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.


No comments